கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம்வரை இந்தியாவின் ஏற்றுமதி 15 ஆயிரத்து 7 கோடி டாலராக பதிவாகி உள்ளது.
புதுடெல்லி, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும்.
பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுபோல், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம்வரை இந்தியாவின் ஏற்றுமதி 15 ஆயிரத்து 7 கோடி டாலராக பதிவாகி உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 19.05 சதவீதம் குறைவாகும்.
கடந்த மாதம் இறக்குமதியும் 11.56 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது
dailythanthi