கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம் -8 பேர் உயிரிழப்பு

மீட்பு பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்ததால், பணியில் இருந்த 14 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உரிய பாதுகாப்புகள் இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்காக, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காண்டிராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

malaimalar