புதுடில்லி: பஞ்சாபில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் ரயில்வேக்கு 1670 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் பாதையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த போராட்டங்களால் ரயில்வேக்கு ரூ.1670 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 50 நாட்களாக பஞ்சாபில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களினால் 1986 பயணியர் ரயில் சேவைகளும் 3090 சரக்கு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ரத்தான இந்த சரக்கு ரயில் சேவைகளால் மட்டும் 1670 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
dinamalar