டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் மாநிலங்கள் தயாராக உள்ளதா என சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டு உள்ளது.

புதுடெல்லி:  டெல்லி, மராட்டியம், குஜராத், மற்றும் அசாம் மாநில அரசுகள்  தற்போதைய கொரோனா பாதிப்பு  மற்றும்  எடுத்த நடவடிக்கைகள்  நிபந்தனை  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

“நடப்பு மாதத்தில் மிகப்பெரிய கொரோனா பரவல்  இருக்கலாம் என  நாங்கள் கேள்விப்படுகிறோம். எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒரு சமீபத்திய  அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய  நாங்கள் கேட்டு கொள்கிறோம் . கொரோனா பரவலுக்கு மாநிலங்கள்  தயாராக இல்லை என்றால் டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் நடக்கக்கூடும்” என்று சுப்ரீம் கோர்ட்  தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலமாகத் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை 5,753 புதிய பாதிப்புகளுடன்  மொத்த பாதிப்பு 17.8 லட்சத்தை தாண்டியுள்ளது.குஜராத் சமீபத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிகரிப்பு கண்டுள்ளது, அகமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு கட்டாயப்படுத்தியது.முதல்வர் விஜய் ரூபானி  இன்று பள்ளிகளையும் கல்லூரிகளையும் மீண்டும் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தது.

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் 5.29 லட்சத்தைத் தாண்டி உள்ளது. தொடர்ந்து கொரோனா   எழுச்சியைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு போராடி வருகிறது, இது ஆறாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது

dailythanthi