தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்

தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாட உள்ளார்.

புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக கலந்துரையாட உள்ளதாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது.

dailythanthi