இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது: 95 லட்சம் பேர் நலம்

புதுடில்லி: இந்தியாவில், நேற்று(டிச.,18) ஒரே நாளில் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய நாடு இந்தியா ஆகும். கொரோனா காரணமாக 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர். 95,50,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,08,751 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட 30 மடங்கு அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

dinamalar