டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 24-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குளிரையும் பொருட்படுத்தாமல் 24வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவரும், குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங், திக்ரி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜமீந்தரா மாணவர் அமைப்பு (ஜே.எஸ்.ஓ) ஏற்பாடு செய்திருந்த உணவை விநியோகித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
“எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களது போராட்டம் மத்திய அரசிற்கு எதிரானது அல்ல, 3 கருப்பு சட்டங்களுக்கு தான் எதிரானது என்றார்
dailythanthi