சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு அனுமதி மறுப்பு; மத்திய அரசு உத்தரவு

சீனாவில் இருந்து வருவோருக்கு விமானத்தில்அனுமதியளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்கத் தகுதியான சீனர்கள் முதலில்   மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்து அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். மேலும், வேறு நாடுகளில் வசிக்கும் சீன பிரஜைகளும் வேலை மற்றும் வணிகத்திற்காக அங்கிருந்து இந்தியாவுக்கு  வருகின்றனர்.

கடந்த வார இறுதியில், இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் – சீன நாட்டினரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று குறிப்பாக கேட்டுக் கொண்டன.இந்த நேரத்தில் சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கு வேலை மற்றும் பிற சுற்றுலா அல்லாத விசாக்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவுக்கு வரும்  சீன நாட்டினர் பெரும்பான்மையானவர்கள் ஐரோப்பாவில் உள்ள  நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்று தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

dailythanthi