பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற பெண்: விடுவித்த எஸ்.பி.,

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் கொடுமை செய்ய முயன்றவனை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில், கைது செய்யும் நடவடிக்கை கைவிடடு, மாவட்ட போலீஸ் எஸ்.பி., விடுதலை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் கடந்த ஜனவரி 2ம் தேதி இரவு 19 வயது பெண்ணை கத்தி முனையில் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த முயற்சியின் போது, இளைஞரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை அந்த பெண் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞரின் பெயர் அஜித் குமார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக அந்த பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106-ன் படி எஸ்.பி அரவிந்தன் விடுதலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் குறித்த எஸ்.பி அரவிந்தனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலர் தமிழக அரசையும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

dinamalar