ரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு கசிவு -4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விபத்து நடந்த ஆலையில் விசாரணை

ஒடிசாவில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ரூர்கேலா: ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள உருக்கு ஆலையில் இன்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு யூனிட்டில் இருந்து விஷ வாயு கசிந்து வெளியேறியது. வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விஷ வாயு பாதிப்பினால் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாயு கசிவு ஏற்பட்டபோது, 10 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும், கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. வாயுக்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

malaimalar