வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி, நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார்.  இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது.  இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை வழங்கியது.

இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.  அவர் விவசாயம், கல்வி, மின், துறைமுகம், ரெயில்வே, கப்பல், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இதன்படி,

விவசாயம்

  • புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

  • விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

  • வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்.

  • சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி

  • டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

  • அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.

  • தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்.

  • லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

  • பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்.

  • பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.

மின்சாரம்

  • கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

  • மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

துறைமுகம்

  • ரூ.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • சென்னை உள்ளிட்ட 5 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

dailythanthi