75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வரி தாக்கலில் இரு்து விலக்கு அளிக்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டும் நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா திரும்பும் போது, இரட்டை வரி விதிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க புதிய குழு அமைக்கப்படும்.

வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. ரூ.1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை 2022 வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar