“விவாதிக்கலாம் வாங்க.,” எதிர்கட்சிகளுக்கு கவர்னர் அழைப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,2) கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அவை நடவடிக்கையில் பங்கேற்குமாறு கவர்னர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. காலை 11:00 மணிக்கு சட்டசபையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையை துவங்கும் முன்பே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி போதாது. திட்டங்கள் ஏதுமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் எழுந்து பேச முற்பட்டார். முதலில் அவை நடப்பதற்கு ஒத்துழைப்பு அளியுங்கள். எந்தவொரு விஷயமும் பேசி தீர்க்கலாம். விவாதிப்போம். அவை நடவடிக்கையில் பங்கேற்கவும் என்று கவர்னர் பதில் அளித்தார்.
ஆனால் கவர்னர் வேண்டுகோளை ஏற்காமல் திமுக மற்றும் காங்., உறுப்பினர்கள் வெளியேறினர்.

இதனை ஏற்க மறுத்த திமுக, கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளுடன் கவர்னர் உரையை துவக்கினார்.

dinamalar