இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.
புதுடெல்லி, கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் (97.31 சதவீதம்), உலகின் மிகச்சிறந்த மீட்பு விகிதங்களில் ஒன்றாகும்.
இதுவரையில் உலகமெங்கும் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 82 லட்சத்து 63 ஆயிரத்து 858 பேருக்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
dailythanthi