ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆறு மாநகராட்சிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் நடந்தது. முன்னிலைஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும், 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், ஆறு மாநகராட்சிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
துவக்கம் முதலே ஆறு மாநகராட்சிகளிலும், பல வார்டுகளில், பா.ஜ., முன்னிலை பெற்றது. ஆறு மாநகராட்சிகளையும் சேர்த்து, மொத்தம், 576 வார்டுகள் உள்ளன. இதில், 409க்கும் அதிகமான வார்டுகளில், பா.ஜ., முன்னிலையில் உள்ளது.எதிர்க்கட்சியான காங்., 33 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
ஆமதாபாத் மாநகராட்சியில், மொத்தம் உள்ள, 192 வார்டுகளில், 101லும், ராஜ்கோட்டில், 72 வார்டுகளில், 68லும், வதோதராவில், 76 வார்டுகளில், 69லும், சூரத்தில், 120 வார்டுகளில், 93லும், ஜாம் நகரில், 64 வார்டுகளில், 50லும், பாவ் நகரில், 52ல், 31லும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
27 வார்டு
சூரத்தில் ஒரு இடத்தில் கூட காங்., வெற்றி பெறவில்லை. முன்னணியிலும் இல்லை. ஆம் ஆத்மி கட்சி, சூரத்தில், 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.குஜராத்தில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி, பா.ஜ.,வுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றி குறித்து, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
dinamalar