மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்
இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என மத்திய கல்வி மந்திரி மேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் உயர்கல்வி மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் புதிய கல்விக்கொள்கையின் மகத்துவம் குறித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அணுகல், சமத்துவம், தரம், மலிவு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடித்தள தூண்களில் கட்டப்பட்ட புதிய கல்விக்கொள்கையானது, ‘நிலையான வளர்ச்சிக்கான 2030’ செயல்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை ஒரு துடிப்பான அறிவு சமூகமாகவும், உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கை, 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்வி நிலப்பரப்பை மாற்றுவதற்கான பாதையை அமைப்பதாக கூறிய பொக்ரியால், இந்த கொள்கையை செயல்படுத்துவதில் தனியாரின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினார்.
malaimalar