டெல்லியில் ஹோலி அன்று 76 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் பதிவு

டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி, கோடை காலம் தொடங்கிய நிலையில், நாட்டின் வடபகுதியில் அமைந்த டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த மையத்தின் விஞ்ஞானி மற்றும் மண்டல தட்பவெப்ப முன்னறிவிப்பு மையத்தின் தலைவரான குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, டெல்லியில் கடந்த 3 நாட்களாக காற்று மணிக்கு 45 கி.மீ. என்ற சராசரி வேகத்தில் வீசி வருகிறது.

இதனால், அதிகம் வெப்பம் ஏற்பட்டு உள்ளது.  இந்த சூழ்நிலை பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், வடக்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானிலும் காணப்படுகிறது.

கடந்த 11 ஆண்டுகளில், 2021ம் ஆண்டின் மார்ச் மாதம் அதிக வெப்பம் நிறைந்திருந்தது.  நாட்டின் தலைநகர் கடுமையான அனல்காற்றால் சிக்கியிருந்தது.  ஹோலி பண்டிகை அன்று 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இது, கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவு மார்ச் மாதத்தில் பதிவான அதிக அளவு வெப்பம் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

dailythanthi