கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி, பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது,

’தனிநபரை விட கட்சி பெரியது; கட்சியை விட தேசம் பெரியது என்று நான் எப்போதும் நம்புகிறேன். பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி காலம் முதல் இன்றுவரை பா.ஜ.க.வின் பாரம்பரியம் பேணி பாதுகாக்கப்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். காஷ்மீருக்கு அரசியலமைப்பு உரிமையை வழங்கியுள்ளோம்.பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும்” என்றார்.

daliythanthi