சசிகலாவுக்கு ஓட்டு இல்லை

சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார்.தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டதால் அந்த முகவரியில் இருந்த சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டோருக்கு ஓட்டுரிமை கோரி வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். ஆனால் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே சசிகலா ஓட்டளிக்க முடியாது.

dinamalar