இன்று புகையிலை எதிர்ப்பு தினம்… பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்

சுதர்சன் பட்நாயக்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூரி: ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி, சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் பிரமாண்டமான கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

இரண்டு முகங்களுடன், நுரையீரலை வடிவமைத்து, புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவும், புகைப்பழக்கத்தில் இருந்து வெளியேறுபவர்கள் வெற்றியாளர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் புகைப்பிடிக்க வேண்டாம் என்றும், இந்த மணல் சிற்பத்தை 5 டன் மணலில் 6 மணி நேரத்தில் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

maalaimalar