ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் தினசரி கொரோனா அப்டேட்ஸ்

ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 20,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் தினசரி கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. வட மாநிலங்கள், மேற்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 12,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 59 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 18,14,393 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,22,381 பேர் குணமடைந்துள்ளனர். 11,999 பேர் உயிரிழந்துள்ளனர். 80,013 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளாவில் இன்று 7,719 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 161 பேர் உயிரிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,13,817 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 26,10,368 பேர் குணமடைந்துள்ளனர். 11,342 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் 6835 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 15409 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 27,71,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,66,774 பேர் குணமடைந்துள்ளனர். 33,033 பேர் உயிரிழந்துள்ளனர். 1,72,141 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2175 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,04,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய காலை அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தென்மாநிலங்களான தமிழ்நாடு (12,772), ஆந்திரா (4,549), கேரளா (7,719), கர்நாடகா (6835), தெலுங்கானா (1511) ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 33,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய பாதிப்பில் ஐந்து மாநிலங்களில் மட்டும் சுமார் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

maalaimalar