பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?; சிபிஎஸ்இ விளக்கம்

புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

கோவிட் 2வது அலை பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறும் பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்காததால் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கம்:

  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

  • பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

  • பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் 40 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

  • பிளஸ் 2-வில் யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  • செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

ஜூலை 31-ம் தேதி ரிசல்ட்

  • இவ்வாறு விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ, பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

dinamalar