பஸ் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? என்பதை கண்டறியவும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நாளை பஸ் போக்குவரத்து – கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கட்டுப்பாடு நீங்கியது
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.
இதன்படி மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து செயல்பட்டு வந்தது.
இதன்பிறகு கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை முதல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் நாளை முழு அளவில் பேருந்து சேவை தொடங்கவுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தொடங்கும் நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் நோய் தொற்று ஏற்படவிடாமல் தடுப்பதற்காக அனைத்து பஸ் நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பஸ் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? என்பதை கண்டறியவும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் பஸ் பயணத்தின் போதும் பஸ் நிலையங்களிலும் அவ்வப்போது ஆய்வு செய்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
maalaimalar