மராட்டியத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 7.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 7.85- லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மும்பை, மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. இது பற்றி சுகாதார செயலாளர் பிரதிப் வியாஸ் தெரிவிக்கையில், “எங்களின் பழைய சாதனையை நாங்கள் முறியடித்து விட்டோம்.

நேற்று மாலை 7 மணி வரை நிலவரப்படி மாநிலத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 311 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி உள்ளோம். இது மாநிலத்தின் உயர்ந்த எண்ணிக்கை. விரைவில் 8 லட்சம் இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் இது வரையில் மொத்தம் 3 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடுவதில் கடந்த 3 மாதங்களாக மராட்டியம் முதலிடத்தில் உள்ளது” என்றார்.

dailythanthi