சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
- மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி
அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்படலாம்
புதுச்சேரிக்கு பஸ் சேவையை துவக்கலாம்
புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை
பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
dinamalar


























Tamil Nadu . என்றே சொல்லவும்,எழுதவும் வேண்டும்….
நன்றி. . .