மாஸ்க் இல்லாமல் மக்கள் பயணம்: பிரதமர் கவலை

புதுடில்லி: மலை பிரதேசங்கள், மார்க்கெட்களில் மாஸ்க்குகள் இல்லாமல் மக்கள் கூடுவது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உருமாறிய கோவிட் வைரஸ்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதை வலியுறுத்த வேண்டும்.

மாஸ்க்குகள் இல்லாமல், பொது மக்கள் மலை பிரதேசங்கள் மற்றும் மார்க்கெட்களுக்கு செல்வது கவலை அளிக்கிறது. மூன்றாவது அலையை எதிர்த்து போராடுவதற்கு, தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

dinamalar