மும்பை: மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையிலும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகள் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
புனே, ரத்னகிரி, கோல்ஹாபூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
நேற்று மும்பை, தானேயில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த, வானிலை ஆய்வு மையம் புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சத்தாரா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், ‘முப்பை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
dinamalar