வெளிநாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது சென்னை. திட்டம்போட்டு தூக்கும் தமிழக அரசு.

மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல்ல சங்கங்களுக்கு  மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும். மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதிக மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூவம், அடையாறு ஆற்றோரங்களில் வாழும் மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் குடிசைமாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்டு தான் அவர்கள் செல்கிறார்கள்.

சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் எனவும் முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் மரம் வளர்ப்பு முறையை மாநகராட்சி துரிதப்படுத்தி வரும் நிலையில் குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”200 மேற்பட்ட குடியிருப்பு நல சங்கங்கள் உடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு சங்கங்களுக்கும் மாநகராட்சி சாலை போட வரும்பொழுது மரம் நடுவதற்கு விருப்பப்பட்டால் மாநகராட்சி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

ஒவ்வொரு குடியிருப்பும் நல சங்கங்களும் குறைந்தது ஒரு ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடவேண்டும். வேலி 6அடி உயரத்தில் இருந்தால் அவை பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும். மரங்கள் நடும் போது, உள்ளூரில் உள்ள மரங்களை வைத்தால் புயல் போன்ற பேரிடர்களின் போது பாதுகாப்பாக இருக்கும். சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை. மரம் நடுவது மக்கள் இயக்கம், எனவே குடியிருப்பு நல சங்கங்கள் மட்டுமே ஒரு மரத்தை நட்டால் அதை நன்றாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் குறைந்தது ஒரு ஆண்டாவது அந்த மரத்திற்கு தண்ணீர் விட வேண்டும். இந்த மரத்துக்குத் தேவையான உரங்கள் மாநகராட்சி இலவசமாக வழங்க தயாராக உள்ளது. மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல்ல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும்.

மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதிக மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூவம், அடையாறு ஆற்றோரங்களில் வாழும் மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் குடிசைமாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்டு தான் அவர்கள் செல்கிறார்கள். மேலும் ஆற்றோரங்களில் மரங்கள் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் பல இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருக்கின்றனர். குறிப்பாக பல்வேறு பெரிய கடைகளில் முகக்கவசம் இல்லாமல் தங்களுக்கு கொரோனோ வராது என்று எண்ணத்தில் இருக்கின்றனர். மாநகராட்சி தினமும் லட்சக்கணக்கில் அபராதம் விதித்தாலும் அவர்கள் அதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை, எனவே மக்கள் கொரோனா அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

(நன்றி Asianet news Tamil )