ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ரூ.1 கோடி அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
அகர்தலா, 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா.
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆண்கள் ஆக்கி அணி.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.
அணியில் இடம்பெற்று இருந்த கேப்டன் மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் சிங், ஹர்திக் சிங், ஜாம்ஷெட் சிங், தில் பிரித் சிங், குர்ஜந்த் சிங், மந்தீப் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசை அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு.
dailythanthi