புதுடில்லி: இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி கோவிட் பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்தது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,166 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 36,803 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.69 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 437 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,32,079 ஆனது.
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.15 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உலக பாதிப்பு
இன்று (ஆகஸ்ட் 17-ம் தேதி) காலை 10:45 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 20 கோடியே 87 லட்சத்து 08 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 லட்சத்து 83 ஆயிரத்து 898 பேர் பலியாகினர். 18 கோடியே 71 லட்சத்து 01 ஆயிரத்து 925 பேர் மீண்டனர்.
dinamalar