ஆதார் கார்டில் புதிய அப்டேட்

குழந்தைகளுக்கான ஆதார் கார்டு தொடர்பாக புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் இல்லாமல் எதுவும் கிடைக்காது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஆதார் கார்டில் நிறைய திருத்தங்களைப் பலர் செய்து வருகின்றனர். பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றில் புதிய அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது. மொபைல் நம்பரை மாற்றுவது போன்றவையும் அடங்கும்.

ஆதார் கார்டில் பல்வேறு விதிமுறைகளையும் அப்டேட்களையும் ஆதார் அமைப்பு (UIDAI) வழங்கி வருகிறது. இந்த ஆதார் அமைப்பு குழந்தைகளுக்கான ஆதார் விஷயத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பயோ மெட்ரிக் விவரங்கள் 5 வயதில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி அப்டேட் செய்யப்படாவிட்டால் அந்த ஆதார் கார்டு செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு 9 மாதம் முதலே ஆதார் எடுக்கப்படுகிறது. ஆனால் குழந்தையின் கைரேகை, கருவிழி ரேகை போன்றவை அப்போது அப்டேட் செய்யப்படுவதில்லை. 5 வயது தாண்டிய பின்னர்தான் இவற்றை அப்டேட் செய்ய வேண்டும்.

குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் இருந்தால் போதும். இல்லாவிட்டால் மருத்துவமனையிலிருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்ட ரசீது போதும். அதோடு குழந்தையின் தந்தை அல்லது தாயின் ஆதார் கார்டு தேவைப்படும்.

(நன்றி Tamil samayam)