குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம்?

சென்னை,

இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே கடந்த மாதம் 28ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

மேலும் இந்திய குடியுரிமை சட்டம் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றி இருப்பதாகவும், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும், அல்லது அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த கூடிய தீர்மானம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

(நன்றி Dailythanthi)