இந்தியா இந்து தேசமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்: பாஜனதா தலைவர் சி.டி. ரவி சொல்கிறார்

காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரை திருப்திப்படுத்தியது. ஆனால், இப்போது இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதை அறிவார்கள் என பா.ஜனதா தலைவர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி. ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி அடிக்கடி  சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. இந்த வகையில் இன்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘இந்தியா இந்து தேசமாக இருந்தது. இருக்கிறது. இருக்கும்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரை திருப்திப்படுத்தியது.  ஆனால் தற்போது இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதை புரிந்துள்ளனர். தற்போது, அவர்கள் துர்கா பூஜை செய்கிறார்கள். கோவில்களுக்கு செல்கிறார்கள். நீங்கள் இந்துவாக இருந்தால், அப்புறம் தேர்தலுக்காக மட்டும் கோவிலுக்குச் செல்லக்கூடாது. தொடர்ந்து கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்’’ என்றார்.

முன்னதாக நவீன பெண்கள், திருமணம் முடிந்தாலும் குழந்தைகள் பெற்றெடுக்க விரும்புவதில்லை என கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்  கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சி.டி. ரவி ‘‘ஒவ்வொரு பெண்களும் அதுபோன்று கிடையாது. இது நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் மேற்கத்திய தாக்கம். ஆனால், இந்தியாவில் நாம் வெளிநாடுகள் போன்று இல்லாமல் குடும்பம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

(நன்றி MAALAIMALAR)