மராட்டியத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைவிருந்தில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையின் விலி பார்லி பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு இன்று ரகசியத்தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் மதிப்பு எத்தனை கோடி ரூபாய் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
dailythanthi