ஆரஞ்சு பழம் விற்று பள்ளிக்கூடம் கட்டிய தொழிலாளி – பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி கவுரவம்
“நான் கல்வி கற்கவில்லை. இது எனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்ற கனவோடு ஒரு பள்ளியை உருவாக்க எனக்கு வழிவகுத்தது ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .
இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ விற்பனையாளர் ஹரேகலா ஹஜப்பாவும் ஒருவர் ஆவார். சிறந்த சமூக சேவை ஆற்றியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்.
ஆரஞ்சு பழம் விற்கும் தொழிலில் இருந்து தனது சேமிப்பைப் பயன்படுத்தி, ஹரேகலா ஹஜப்பா, கர்நாடகாவின் தக்ஷிண் கன்னடா மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார்.
“நான் கல்வி கற்கவில்லை. இது எனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்ற கனவோடு ஒரு பள்ளியை உருவாக்க எனக்கு வழிவகுத்தது ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
dailythanthi