13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார் , திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலி காரணமாக, கடலுார், விழுப்புரம் , சேலம் , ராணி பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

dinamalar