அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி

அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும்.  ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க முடிந்தது.  இது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசியை கடந்து மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று தோன்றிய ஒன்று, தற்போது சாத்தியமாகி வருகிறது.

வரும் ஆண்டுகளில், இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் அசாதாரண இலக்குகளை அடைய வேண்டும். அனைவரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தி புதிய உச்சங்களை நாம் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிம்லாவில் நடைபெறும் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

maalaimalar