ட்ரோன்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா வந்தடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆளில்லா புதிய வகை ஹெரான் விமானங்கள் வந்தடைந்தன.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
லடாக் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய ராணுவம் லடாக் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.
இருந்தாலும் சீன ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவல் சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.
அவசரகால அடிப்படையில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதனால் இஸ்ரேலியிடம் இருந்து நவீன வகை ஹெரான் ட்ரோன்களை வாங்க முடிவு செய்தது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹெரான் ட்ரோன் இந்தியா வந்தடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஹெரான் ட்ரோன்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த ட்ரோன்கள் லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
maalaimalar