வருகிற 20-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு முன்பு ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து சிறு, குறு நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
புதுடெல்லி: அகில இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உருக்கு, தாமிரம், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் விலை 37 சதவீதம் முதல் 154 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற 20-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு முன்பு ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அத்துடன் ஒருநாள் நிறுவனங்களை மூடி எதிர்ப்பு தெரிவிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.