52 மாணவர்களுக்கு கொரோனா – மகாராஷ்டிராவில் பள்ளிக்கு சீல்

ஜவஹர் நவோதயா பள்ளியில் நேற்று 19 மாணவர்களுக்கும், இன்று 33 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

அகமத்நகர்: மகாராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டம், தக்லி தோகேஷ்வர் பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியில் நேற்று 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அப்பள்ளியில் உள்ள 450 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 33 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.