ராஜஸ்தான் சிறுமி பலாத்கார வழக்கு- ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போலீஸ் தகவல்

திஜாரா மேம்பாலம்

சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

ஜெய்பூர்: கடந்த ஜனவரி 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக ரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைகள் டி.ஐ.ஜி ரவி கூறியதாவது:-

சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சிறுமி வீட்டில் இருந்து கிளம்பி மேம்பாலம் வரும் வரை உள்ள அனைத்து இடங்களின் சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்தோம்.

அதில் அந்த சிறுமி நல்லபடியாகதான் இருக்கிறார். அவர் மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் அந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும்.

நாங்கள் வேறு கோணத்தில் இருந்து இந்த வழக்கை ஆராய தொடங்கியிருக்கிறோம். ஆனால் பாலியல் பலாத்காரத்திற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கிறது.

இவ்வாறு ரவி தெரிவித்தார்.

maalaimalar