அணிவகுப்புகள்
முப்படைகளின் மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.
குடியரசு தின நிகழ்ச்சிகள் நிறைவு- குடியரசு தலைவர் மாளிகைக்கு திரும்பினார் ராம்நாத் கோவிந்த்
புது டில்லி: இந்தியாவின் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.
இதன்பின் இந்திய ராணுவத்தின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் துவங்கி, இந்தியா கேட் வரை நடந்தது.
முதலில் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை வீரர்கள் குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து ராணுவத்தின் டாங்கிகள் தாங்கிய வாகனம் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கி உட்பட 1965, 1971 போரில் பயன்படுத்திய டாங்கிகள் மற்றும் தற்போதைய நவீன ஆயுதங்களும் இடம்பெற்றன.
டாங்கிகள்
இதை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 6 படைப்பிரிவு அணிவகுப்பு நடைபெற்றது. அசாம் ரெஜிமெண்ட், ஜம்மு காஷ்மீர் லைட் ரெஜிமெண்ட், சீக் லைட் ரெஜிமெண்ட், பாராசூட் ரெஜிமெண்ட் , மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இதையடுத்து ‘நாங்கள் பாதுகாப்போம்‘ என்ற வாசகத்துடன் கடலோர காவல்படை வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆஞ்செல் ஷர்மா தலைமையிலான 96 இளம் மாலுமிகள் இடம்பெற்றனர்.
கடற்படை
இதன்பின் 96 விமானப்படை வீரர்கள், 4 அதிகாரிகள் கொண்ட விமானப் படை அணிவகுப்பு நடைபெற்றது. மிக்-21 , ரபேல் விமானங்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர் அணிவகுப்பில் பங்கேற்றன. தேசிய கொடியின் மூவர்ண பொடிகளை தூவியவாறு போர் விமானங்கள் பறந்தன. விமானப்படை வீரர்கள் மேகக் கூட்டங்களுக்கு இடையே நேர்த்தியாக சாகசம் நிகழ்த்தினர்.
போரின் போது இக்கட்டான சூழலில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் இருசக்கர வாகன வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரூபேந்திர சிங் சவுகான் தலைமையில் என்.சி.சி வீரர்கள் கம்பீர அணிவகுப்பும், பரையா ஷிதி ரமேஷ் தலைமையிலான என்.எஸ்.எஸ் வீரர்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த அணிவகுப்புக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகள் இடம்பெற்றன.
அலங்கார ஊர்தி
இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிகளின் நிறைவையடுத்து குடியரசுத் தலைவர் சிறப்பு படை சூழ மாளிகைக்கு திரும்பினார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.