இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று 

கொரோனா பரிசோதனை

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

maalaimalar