சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,524 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர். 23,938 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 9,916 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 7,524 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,26,701 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 7,519 பேருக்கும் மற்றும் இலங்கை சென்று திரும்பிய ஒருவர் மற்றும் ஆந்திரா 2 , அசாம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களுக்கும் சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 7,524 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,04,762 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,24,01,480 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 4,338 பேர் ஆண்கள், 3,186 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19,86,820 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,17,904 ஆகவும் அதிகரித்து உள்ளது. 23,938 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,28,151 ஆக உயர்ந்துள்ளது.
37 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 23 பேரும் , அரசு மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,733 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,475 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 5 ம் தேதி) 1223 ஆக குறைந்துள்ளது.
dinamalar