தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.
லக்னோ, நாடிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. ஹத்ராஸ், பிரோசாபாத், இடா, காஸ்கஞ்ச், மெயின்புரி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
அதேபோல், 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ஆம் ஆத்மி முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மன், முன்னாள் முதல்-மந்திரிகளான அமரீந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். மாநிலம் முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
dailythanthi