ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, ஆங்கிலம் ஆகியவை உள்ளன.

ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய அரசு இதனை வரவேற்பதாக ஐ.நா.விற்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். பன்மொழி பயன்பாடு என்பது ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐ.நா. பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என கூறினார்

 

Malaimalar