100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்- தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது

ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரம்பரியமிக்க கோவில்கள் மற்றும் சிறந்த கட்டிட கலை ஆகிய சிறப்பம் சங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலா தலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் நாட்டின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் பள்ளி அறிந்து கொள்ளும் வகையில் ஒரே இடத்தில் அவற்றை விளக்கும் வகையில் பிரமாண்ட ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி அதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரி உள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

-mm