ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் பலி

ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரவு 9 மணியளவில் அந்த போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

 

-mm