ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டேன். தமிழ் வழியில் மருத்துவ கல்விக்கான புத்தகம் தயாரிக்க குழு அமைக்கப்படும்.
புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்படும்.
மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும்.
சுமார் 6 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும். ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தாய் மொழியான நம் தமிழ் மொழி மருத்துவக் கல்வியை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும், ஒரு மருத்துவர் என்ற முறையில் செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-mm