தங்கம் இல்லாவிட்டால் என்ன? வெள்ளியை வாங்குவோம்: களைகட்டும் தீபாவளி

இந்தியாவில் தீபாவளியின்போது மக்கள் பெரும்பாலும் தங்கம் வாங்க விரும்புவார்கள். ஆனால் தங்க விலை ஏற்றம் கண்டுள்ளதால் அதற்குப் பதிலாக அவர்கள் வெள்ளியை வாங்குகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை, செலவு செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் ஓர் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.இந்த ஆண்டு இந்தியாவில் வெள்ளி விற்பனை நன்றாக இருக்கும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

வணிகர்களில் ஒருவர் தனது வெள்ளி வியாபாரம் 50 விழுக்காடு உயர்வு கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் வெள்ளி – தங்கத்திற்கான விலை வித்தியாசம் என்ன?

1 கிலோ வெள்ளி: 56,000 ரூபாய் (சுமார் 960 வெள்ளி)

10 கிராம் தங்கம் : 52,000 ரூபாய் (சுமார் 892 வெள்ளி)

வெள்ளியில் ஏன் முதலீடு செய்கிறார்கள்?

இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதால் சிலர் தங்கம் வாங்க முடியாமல் இருக்கின்றனர்.அதனால் அவர்கள் வெள்ளியை வாங்க முனைகிறார்கள்.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து வெள்ளியின் விலை 9 விழுக்காடு குறைந்துள்ளது.வெள்ளியின் விலை உயரும்போது அது சிறந்த முதலீடாக இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

என்றாலும் இந்தியாவில் பெரிய கலாசார  முக்கியத்துவம் பெற்றுள்ள தங்கத்தின் இடத்தை வெள்ளியினால் ஈடுகட்ட முடியாது என பலர் கூறுகின்றனர்.

 

 

-smc